டென்மார்க்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடும் எண்ணிக்கையை அந்நாட்டு அரசாங்கம் அதிகரித்துள்ளது.
இதற்கமைய ஒன்று கூடுபவர்களின் எண்ணிக்கை 10 இல் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டென்மார்க் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடுகளை கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு டென்மார்க் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, டென்மார்க்கில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 948 ஆக பதிவாகியுள்ளதுடன், 10 ஆயிரத்து 755 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.