அக்கரப்பத்தனை – டயகம பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
7 பெண்களும், ஆணொருவரும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அதில் ஒரு பெண் தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.