மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோர்டானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இலங்கைத் தூதரகம் அவதானம்!

- Advertisement -

ஜோர்டானில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில்  அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில்  ஜோர்தானில் உள்ள இலங்கையர்களின் நலன் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜோர்தானில் கொரோனா தொற்று காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்துள்ள இலங்கையர்களின்  குடும்பங்களுக்கு  இலங்கை தூதரகத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிதி உதவியில்   இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் சுமார் 576 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக  ஜோர்தானில் உள்ள 46 இலங்கையர்கள்  தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜோர்தானில் உள்ள இலங்கை பிரஜைகள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் அங்குள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz