கொரோனா தொற்று காரணமாக ஜேர்மனியில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 236 வெளிநாட்டு கப்பல்களில் பணிபுரிவோர் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 1206 எனும் விமானம் மூலம் ஜெர்மனியின் ஹாம்பர்க் விமானநிலையத்தில் இருந்து இவர்கள் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் ஊழியர்கள் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு பின்னர் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.