மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தடைகளையும் மீறி அனுஷ்டிப்பு!

- Advertisement -

சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு இதேநாளில் விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

- Advertisement -

குறித்த படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் காலை 10 மணியளவில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில் இடம்பெற்றன.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த உறவுகளில் ஒரு பகுதியினரை அடக்கம் செய்த சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன் போது குறித்த தாக்குதலில் தன்னுடைய நான்கு பிள்ளைகளை பறிகொடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து புஸ்பராசா என்கின்ற தந்தையார் பொதுச்சுடரினை ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர் வணக்கமும் நினைவு உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் மற்றும் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் கனகராசா ஜீவராசா மற்றும் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் குழுத் தலைவர் தம்பையா யோகேஸ்வரன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை,குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக்கழக மைதானத்தில் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மேற்படி நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தடைகளையும் மீறி அனுஷ்டிப்பு! 1 சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தடைகளையும் மீறி அனுஷ்டிப்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

Developed by: SEOGlitz