மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் இருந்து புறப்பட்டது யாழ்தேவி!

- Advertisement -

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரத சேவை இன்று இடம்பெற்றது.

யாழில் இருந்து புறப்பட்ட யாழ் தேவி வவுனியாவில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டது.

- Advertisement -

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பயணிகள் ஏற்றப்பட்டதுடன் புகையிரத நிலையத்தில் சமூக இடைவெளியும் பேணப்பட்டது.

வவுனியா புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர்.

மார்ச் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் புகையிரத சேவை வடக்கில் இன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரு மாதங்களுக்கு மேலாக பாவனையற்று காணப்பட்ட ரயில்வே தண்டவாளங்களில் காணப்படும் புற்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

வடக்கில் இருந்து புறப்பட்டது யாழ்தேவி! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பதுளையில் ஜனாதிபதி வெளிளிட்ட முக்கிய அறிவித்தல்……

மக்களின் நலன் கருதி வாய்மூலமாக வழங்கப்படும் பணிப்புரைகளை சுற்றறிக்கைகளாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த பணிப்புரையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயம்……

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பெரீஸ் நகரில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காயமடைந்தவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென  பரீஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல்தாரி...

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவும்! மக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு,...

பேசுவதற்கு பேச்சுமில்லை சொல்வதற்கு வார்த்தையுமில்லை: இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா "கந்தர்வர்களுக்காக பாட போய் விட்டீரா?" எனக்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். https://www.facebook.com/Ilaiyaraaja/posts/3551745441536644

இந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை  இந்தியாவில்...

Developed by: SEOGlitz