அவுஸ்திரேலியா மீது சீனா விதிக்கும் ஏற்றுமதித் தடைகளால் தாம் பாதிப்படையப் போவதில்லை என அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சீனாவின் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாத் தொற்று விவகாரத்தில் அலட்சியமாகச் செயற்பட்ட சீனாவுடன் எதிர்காலத்தில் எந்த வர்த்தகத் தொடர்புகளையும் பேணுவதற்குத் திட்டமிடப்போவதில்லை என பிரதமர் ஸ்கொட் மெரிஸன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவுஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடைபெறுவதால் சீனர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் சுற்றுலாப் பயணிகள் அலுஸ்திரேலியாவைத் தவிர்க்க வேண்டும் என்று தனது நாட்டுப் பிரஜைகளுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.
சீனாவினது இந்த நிலைப்பாடு எம்மை ஒருபோதும் பாதிக்காது.நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவே தேவையற்ற மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம்.
எங்கள் நாட்டினது பெருமைகளையும் மதிப்புகளையும் நாங்கள் விற்கத் தயாராக இல்லை என அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.