மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தும் வயதெல்லையில் மாற்றம்!

- Advertisement -

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கான வயதெல்லை 14 இலிருந்து 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானமொன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இலங்கையில் தொழில்புரிவோரின் உரிமைகளைப் பாதுகாக்க தொழில் திணைக்களத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பூச்சிய மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் தொழில் திணைக்களம்  மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, 1956ஆம் ஆண்டு 47ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில், 14 வயதாக காணப்படும் தொழில் புரிவதற்கான வயதெல்லையை 16ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz