மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுபான்மைச் சமூகங்களில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவு உறுதி : காதர் மஸ்தான்!

- Advertisement -

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஆதரவு அலைகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நல்லாட்சியால் நாட்டு மக்கள் திருப்தியடைந்துள்ளனர். சிறுபான்மை மக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தொடர்பில் பாரிய சந்தேகம் கொண்டிருந்தனர்.

சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச் சாட்டுக்களே அதற்கு காரணம். ஆனால் இன்று அதனை மறுதலிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அவர்களுடைய செயற்பாடுகளால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஆதரவு அலைகள் ஏற்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலின் போது வன்னித் தேர்தல் தொகுதியில் இருந்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 7 பேரில் நான் மட்டுமே ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கு சார்பாக பிரச்சாரம் செய்திருந்தேன்.

ஏனைய 6 பேரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமாதாச அவர்களுடன் இருந்தார்கள். அந்த நிலையிலும் ஓரளவு வாக்குளை நாம் எமது பகுதியில் பெற்றுக் கொடுத்தோம்.

தேர்தலுக்கு பிறகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது செயற்பாட்டில் குறிப்பாக சிறுபான்மையின மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

நாடாளுமன்றம் கலைத்தமையை பிழை என மாற்றுக் கொள்கையுடைய மாற்றுக் கட்சியினர் சிலர் முயற்சித்தார்கள்.

ஆனால் அவ்வாறு இல்லை என சுயாதீனமாக இயங்கும் சட்டத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த தீர்ப்பு மூலம் மக்கள் விரும்புகின்ற ஒரு ஆணையை வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு திகதியை அறிவித்த பின் நாம் அடுத்து தேர்தலை நோக்கி செல்ல இருக்கின்றோம்.

அடுத்து வரும் நாடாளுமன்றத்தை பெரும்பான்மை பலத்துடன் நிறுவ வன்னி மக்களும் ஆதரவு வழங்குவார்கள்” என முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை!

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை  சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, பொலிஸ்  கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்...

நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பிலான முழு விபரம் உள்ளே!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய  மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி,  கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் புறக்கோட்டை...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து 488 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 78 பேரும்,...

கண்டி – அக்குரணை பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71...

Developed by: SEOGlitz