மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுத்தைகளைப் பாதுகாக்கும் விசேட திட்டம்!

- Advertisement -

ஶ்ரீபாத அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தைகளைப் பாதுகாக்கும் திட்டமொன்று வனவிலங்குத் துறையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நல்லத்தன்னி மற்றும் லக்ஷபான தேயிலைத் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் வேட்டையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பொறிகளை அகற்றுவதற்கு தோட்ட நிர்வாகத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதன்படி, தேயிலைத் தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் பொறிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதே இதன் நோக்கமென வனவிலங்குத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தேயிலைத் தோட்டங்களில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் பொறிகளில் சிக்கி அண்மைக்காலமாக நாட்டில் அருகிவரும் சில உயிரினங்கள் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி…!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்,  Kandy Tuskers மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அக்கரைப்பற்று பகுதியில் 24 பேரும் திருக்கோவில் பகுதியில் மூவரும்  தமன...

அமெரிக்காவில் மேலும் தீவிரமடையும் கொரோனா..!

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 892 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அமெரிக்காவில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 50...

மஹர சிறைச்சாலை விவகாரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்துள்ள கைதிகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ராகம வைத்தியசாலை தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதனிடையே மேலும் கைதிகள் 107 பேர் உட்பட  சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக...

நான்காவது அகவையில் தடம் பதிக்கும் கெப்பிட்டல் எப்.எம்

கெப்பிட்டல் எப்.எம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் நாம் கடந்துவந்த இந்த மூன்று ஆண்டுகள் தொடர்பான விசேட பார்வை. தமிழ் பேசும் மக்களின் கலைத் தாகத்திற்கு விருந்தளிக்கும் வகையிலும், நாட்டின் அரசியல்,...

Developed by: SEOGlitz