‘இட்டுகம’ எனப்படும் கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு 124 கோடி 36 இலட்சத்து 56 ஆயிரத்து 318 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியான அன்பளிப்புகளுடன் நிதியத்தின் வங்கி கணக்கில் இடப்பட்ட நேரடி வைப்புகளுடன் இந்த தொகை எட்டப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ‘இட்டுகம’ இணையத்தளத்தின் ஊடாக 17 இலட்சத்து 86 ஆயிரத்து 50 ரூபா இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.