கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கடந்த 30 ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியிலுள்ள கட்டடத் தொகுதியொன்றுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
கடந்த 31 ஆம் திகதி ஏற்கனவே ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார் .
இந்த நிலையில் கொழும்பு குற்றத்’ தடுப்புப் பிரிவினரால் மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
ராஜகிரிய பகுதியிலுள்ள சொகுசு மாடிக் கட்டடத்தொகுதியொன்றில் இருந்து பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.,
31 வயதான பிரதான சந்தேகநபர் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்