மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு தெற்கு பகுதிக்குட்பட்ட கரையோரங்களில் செயற்கை மணலை இடுவதற்கு பரிந்துரை!

- Advertisement -

கொழும்பு தெற்கு பகுதிக்குட்பட்ட கரையோரங்களில் செயற்கை மணலை இடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடலரிப்பை தடுக்கும் நோக்கில், இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே பிரபாத் சந்திரகீர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கமைய, களுத்தறை கலிடோ கரையோரம், இரத்மலானை அங்குலானை கரையோரம் மற்றும் கல்கிஸ்ஸை கரையோரம் என்பவற்றில் செயற்கை மணலை இடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வேலைத்திட்டத்திற்கு சுமார் 890 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

Developed by: SEOGlitz