மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் வளியின் தரம் தொடர்ந்தும் மாசடையும் சாத்தியம்!

- Advertisement -

கொழும்பில் வளியின் தரம் மீள தொடர்ந்தும் மாசடைந்து வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு  கொழும்புக்குள் அதிக வாகனங்கள் பிரவேசிப்பதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஊரடங்கு காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 150 வீதம் வளியின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஊரடங்கு காலப்பகுதியில்  வளி மாசடைதல் குறைவடைந்திருந்தமையினால் ரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள சில மலைகள் கொழும்புக்கு தென்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மேலும் பல வாகனங்கள் கொழும்பு வருகை தரும் சாத்தியமுள்ளதால் எதிர்வரும் நாட்கள் வளி மாசடைதல் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 349 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz