மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பாதிப்பு : கடன் அறவீட்டை தற்காலிகமாக நிறுத்தியது சீனா!

- Advertisement -

கொவிட் –  19 அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிடமிருந்து கடன் மீள அறவிடுவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, சுமார் 77 நாடுகளுக்கு இவ்வாறு சலுகை வழங்கப்படவுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மா சொக்சு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

எனினும், அவ்வாறு சலுகை வழங்கப்படவுள்ள நாடுகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைக்கு அவ்வாறான சலுகையை வழங்குவது குறித்து இருதரப்பும் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட நேர தொலைபேசி உரையாடலின் போது, இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அண்மையில் இடம்பெற்ற  G 20  மாநாட்டில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில்  நீண்டநேரம் விவாதம் நடைபெற்றதாகவும், அதன்போது இலங்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க அனுமதி!

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,  ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக C.A.சந்திரபிரேம, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை...

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கெதிரான மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

கண்டி மாவட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய...

Developed by: SEOGlitz