மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து ரஷ்யாவில் அறிமுகம்!

- Advertisement -

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பு மருந்தினை ரஷ்ய அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

- Advertisement -

இதன்படி, கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. அவிபாவிர் (Avifavir) என்ற இந்த மருந்து அந்நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யாவிலுள்ள கெம்ரர் (ChemRar) என்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்துள்ளது.

இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளதுடன், மாதம் தோறும் 60,000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 ஆயிரத்து 779 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 2 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 6 ஆயிரத்து 532 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 இலட்சத்து 61 ஆயிரத்து 150 பேர் குணமடைந்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று!

மஹர சிறைச்சாலைக் கைதிகள் 12 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளுள் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளான 147 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்...

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி…!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்,  Kandy Tuskers மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz