நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 35 பேர் குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 287 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுவரை ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 589 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கமைய, பாதிக்கப்பட்டவர்களில் தொள்ளாயிரத்து 25 கடற்படையினரும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அத்துடன், 35 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.