மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனாத் தொற்று நெருக்கடி நிலைகளின்போது கருத்து சுதந்திரம் பாதிப்பு : ஐ.நா கவலை!

- Advertisement -

கொரோனாத் தொற்று நெருக்கடி நிலைகளின்போது இலங்கை உள்ளிட்ட ஆசிய – பசிபிக் பிராந்தியங்களில் கருத்து சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும், கொரோனாத் தொற்றுக் குறித்து சிறிய குறைபாடுகளை விமர்சித்த அல்லது முன்னிலைப்படுத்தியதாகக் கூறப்படும் நபர்கள் கூட கைது செய்யப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது அதிகாரிகள் அல்லது கொள்கைகளை வெறுமனே விமர்சித்ததற்காக கைது செய்யப்படுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என கடந்த ஏப்ரல் 25 ம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் காவல்துறையினருக்கு அறிக்கையினை வழங்கியிருந்தது.

கொரோனா தொற்றுநோய் பரவலின் பின்னர் பல நாடுகளில் தணிக்கை மேலும் இறுக்கமடைந்துள்ளதாகவும், தமது அரசாங்கத்தை விமர்சிக்கும் நபர்களை தன்னிச்சையாக கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அல்லது தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்கள் பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளனர்.

எனவே இவ்வாறான அசாதாரண நிலைகளின்போது அரசாங்கங்கள் நியாயமான சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன் குறித்த சட்டங்கள் மக்களுக்கான இலகுபடுத்தப்பட்ட தண்டனைகளைப் பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

Developed by: SEOGlitz