மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டமைப்பு போன்ற அநாகரிகமான அரசியலை செய்ய விரும்பவில்லை : கருணா!

- Advertisement -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று அநாகரிகமான அரசியலை நாம் செய்ய விரும்பவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கல்முனையிலுள்ள கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கான எல்லை எனக்கு தெரியாது என கூறுவது வேடிக்கையான விடயம்.

ஏனெனில் அவருக்கு வரைபட அறிவு இல்லை. நாங்கள் கடந்த 25 வருட காலம் வரைபடங்களுடன் போராட்ட காலங்களில் நடமாடியவர்கள் கோடீஸ்வரனின் கருத்தை ஒரு அறிவற்ற கருத்தாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

கோடீஸ்வரனின் கருத்தை ஒரு அறிவற்ற கருத்தாகவே நாங்கள் பார்க்கின்றோம். நாங்கள் இவர்கள் போன்று அநாகரிகமான அரசியலை செய்ய விரும்பவில்லை. அவர்களை குற்றம் சுமத்துவதற்கு கூட விரும்பவில்லை.

மக்கள் விழிப்படைந்திருக்கிறார்கள். எங்களது நோக்கம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். வாழ்க்கைச் சுமையை குறைக்க நாங்கள் தற்போது களமிறங்கி இருக்கின்றோம்.

எனவே நாம் முன் வைத்த காலை ஒருபோதும் பின் வைக்க போவதில்லை நிச்சயமாக வெற்றி பெற்று சேவையாற்றுவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் வெறுமனே வாக்குதியாக மட்டும் இருந்துவிடக்கூடாது – கயந்த கருணாதிலக்க வலியுறுத்தல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ள அரசாங்கம் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர்...

வார இறுதி நாட்களில் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

வார இறுதி நாட்களில்  புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவைகள் திணைக்களம்  நேற்று  இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல்  அதிகரித்து வருவதன் காரணமாக இந்தத் திட்டம்...

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

Developed by: SEOGlitz