தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கபட நாடகங்களை தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதையுமே செய்யவில்லை என்பதை தற்போது தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
கூட்டமைப்பினர் விடுதலைப் போராட்டத்தை வைத்தே இவ்வளவு நாளும் பிழைப்பு நடத்தி வந்தனர்.தற்போது அதனையும் கேவலப்படுத்தும் செயற்பாடுகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் சுமந்திரனது கருத்துக்கள் இதனைத் தெளிவாகத் தெரிவிக்கின்றது. ஆனால் கூட்டமைப்பு சுமந்திரன் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை கட்சியில் இருந்து நீக்குவதா இல்லையா என்று கூட இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஆனால் தமிழ் மக்கள் தற்போது அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளனர்.மக்கள் அவர்களது அனைத்து கபட நாடகங்களையும் உணர்ந்து கொண்டுள்ளனர்” என விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.