மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தொடர்ந்தும் கடமை ஆற்றலாம் : நீதிமன்றம் உத்தரவு!

- Advertisement -

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக எம். ஐ. எம். மன்சூர் தொடர்ந்தும் கடமை ஆற்ற முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால்,  மாகாண கல்வி பணிப்பாளராக எம்.கே. எம்.மன்சூர் நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநராக எம். எல். ஏ.எம்.ஹிஸ்புல்லா பொறுப்பேற்றதையடுத்து 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி  கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளராக எம். டி. எம். நிஸாம் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,  எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படாது தன்னுடைய நியமனத்தை ரத்து செய்தமைக்கு எதிராக எம். ஐ. எம். மன்சூர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 05ம் திகதி குறித்த நியமனத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இது தொடர்பான வழக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது.

இந்த நிலையிலேயே, இது தொடர்பான விசாரணை இன்றும் இடம்பெற்றது.

இதன்படி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல் ஏ. ஹிஸ்புல்லா தன்னிச்சையாகவும் சட்டத்திற்கு முரணாகவும், நியமனம் வழங்கியுள்ளதாக மனுதாரர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியிலேயே, கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக எம். ஐ. எம். மன்சூர் தொடர்ந்தும் கடமை ஆற்ற முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz