மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி மக்களின் காணிப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு : அங்கஜன் இராமநாதன் உறுதி!

- Advertisement -

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் காணிப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் காணி விடயம் தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் நிலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சருடன் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

குறித்த சந்திப்பு நேற்று பிற்பகல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் ஊடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் உள்ள சர்ச்சைக்குரிய காணிகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.

குறித்த காணி தொடர்பான பிரச்சினைகள் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டதுடன், அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினை தொடர்பில் அமைச்சர் எஸ் எம் சந்திரசேன மற்றும் அமைச்சின் செயலாளர் ஏ.ஏ.கே ரணவக்க ஆகியோரின் கவனத்திற்கு அங்கஜன் இராமநாதனால் எழுத்து மூலமாகவும் வழங்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் நாகர்கோவில் மற்றும் கிளிநொச்சி ஆனைவிழுந்தான், ஜெயபுரம் மக்களின் காணி விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறித்த சந்திப்புத் தொடர்பாக அங்கஜன் இராமநாதன் கருத்துத் தெரிவித்தபோது,
மக்களின் நீண்டகால பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் மக்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மக்களின் நீண்டகால பிரச்சினைகளிற்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சருடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தேன். குறித்த சந்திப்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.

விரைவில் குறித்த பிரச்சினைகளிற்கு தீர்வு எட்டப்பட்டு மக்கள் தமது சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கும், தொழில் விடயங்களை தடையின்றி மேற்கொண்டு வாழ்வாதாரத்தில் முன்னேறும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களிற்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுப்பேன் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மக்களின் காணிப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு : அங்கஜன் இராமநாதன் உறுதி! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின

நாட்டின் பல பாகங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. பொரளை கின்ஸி வீதி, நொரிஸ் கெனல் வீதி ,கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை தும்முல்ல சந்தி மற்றும் ஆமர்...

Developed by: SEOGlitz