மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி நகரில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு!

- Advertisement -

கிளிநொச்சி நகரில் 12.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட நவீன பொது வசதிகள் மையம் மக்களது பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

- Advertisement -

உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த பொது வசதிகள் மையம் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு இன்று கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி, கனகபுரம் வீதியுள்ள சேவைச்சந்தையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நவீன முறையில் குறித்த பொது வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பொது மலசலகூடம், பாலூட்டும் அறை, குளியலறை உள்ளடங்கலாக குறித்த பொது வசதிகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் யு.கே. ரணதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி நகரில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு! 1 கிளிநொச்சி நகரில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு! 2 கிளிநொச்சி நகரில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

கம்பஹாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அவர்களில் 10 பேர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுகின்றவர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz