மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் இரகசியமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மீட்பு!

- Advertisement -

கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 4.5 அடி உயரம் கொண்ட 09 கஞ்சா செடிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், இச்செடிகளை வளர்த்ததாக சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

கிளிநொச்சி நகரை அண்மித்த ஆனந்தபுரம் பகுதியில் மேற்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதீபனிற்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கிளிநொச்சியின் பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் இரகசியமாக வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மீட்பு! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz