மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிரிக்கெட் வீரர் மதுஷங்கவிற்கு விளக்கமறியல்!

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவை எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷெஹன் மதுஷங்க மே 24ஆம் திகதியன்று 2 கிராம் சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக பன்னல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

- Advertisement -

இதனையடுத்து மே 25 ஆம் திகதி பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவர் மீண்டும் குளியாபிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு இன்று மீண்டும் விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபை (எஸ்.எல்.சி) ஷெஹன் மதுஷங்காவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்திருந்தது.

குறித்த முடிவானது இலங்கை கிரிக்கெட் சபை முழுமையான விசாரணைகள் முடிவடையும் வரை மதுஷங்காவை இடைநீக்கம் செய்யும் முடிவில் மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான மதுஷங்கா, 2018 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமான போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திச் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தம்பலகாமம் – இக்பால் நகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?

தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையை கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையின் போது மாத்திரமே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தற்போது மழைக்காலத்திலும் குடிநீர் இன்றி சிரமங்களை எதிர்கொள்பவர்கள் நாட்டில் அதிகளவாக இருக்கின்றனர். இவ்வாறுதான் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம்...

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூகொடை பொலிஸ் OIC இற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொல்கஸ்லந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், போதைப் குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம்...

ஊரடங்கை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 24 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு...

Developed by: SEOGlitz