மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடியலைந்த தந்தை உயிரிழப்பு!

- Advertisement -

யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவரே இன்று காலை 10.00 மணியளவில் மரத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

- Advertisement -

வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் 71 வயதான சின்னச்சாமி நல்லதம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி உயிரிழந்தவர் வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1200 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தார்.

அவரது மகனான சசிதரனை 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் கடத்திச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக தனது மகனைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டு காணாமல் போன உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

‘ஸ்புட்னிக் வீ’ தடுப்பூசிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

நாட்டில் அவசர தேவை நிமித்தம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுக்கு அரசாங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை...

நாட்டில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை...

ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் – ரொஷான் ரணசிங்க உறுதி

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கூட்டு முடிவொன்று மேற்கொள்ளப்படும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும், தற்போது மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள்...

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை 729,000 ஐ கடந்தது

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால்...

மியன்மாரில் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு!

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனநாயகத்தைப்...

Developed by: SEOGlitz