மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்

- Advertisement -

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போசாக்கு உணவு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த நாட்களில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினாலேயே, இவ்வாறான உலர் உணவு பொதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பித்ததும் மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வலயக்கல்வி பணிமனைகள் ஊடாக மாணவர்களின் வீடுகளுக்கே குறித்த உலர் உணவு பொதி அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதேவேளை, அனைத்து பாடசாலைகளுக்கும் 15 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் அதிபர்களுக்கு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மேலும் 221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனாவுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

நோர்வூட் பிரதேசத்தில் தீப்பரவல் : 12 குடியிருப்புகள் பாதிப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவ்வெளி தொழிற்சாலைப் பிரிவில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் 12 குடியிருப்புகள் எரிந்து போயுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 இற்கு  இடம்பெற்றதாக எமது பிராந்திய...

Developed by: SEOGlitz