மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்கிஸ்ஸை கடற்கரையில் கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு! !

- Advertisement -

கல்கிஸ்ஸை கடற்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டீ விக்ரமரட்ன சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

கல்கிஸ்ஸை கடற்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் கடற்படையினர் உட்பட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

- Advertisement -

கல்கிஸை கடற்கரையில் ஏதேனும் நிறுவனத்தால் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கல்கிசை கடற்கரையில் சுமார் 200 சதுர அடி பரப்பளவில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிறுவனம் ஒன்றால் சேகரிக்கப்பட்ட கழிவுகள் இவ்வாறு கொட்டப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாக கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கடற்படை , கடலோர பாதுகாப்புத் துறை உட்பட கடல் மற்றும் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் என்பன விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 131 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளமை

காசுமாலை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நடிகை…

ஆதித்ய வர்மா படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் அவரது சமூக வளைத்தளங்களில் புதிய புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.  

நீதவான் நீதிமன்றத்தினால் அடைக்கலநாதனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவரை நாளை (24) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு...

பிரபல நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு… சோகத்தில் ஆழ்ந்த சினிமா…

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலாமானார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் இன்று காலமானார். தமிழ் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013...

Developed by: SEOGlitz