ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி எதிர்வரும் திங்கட் கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி George Floyd இன் கழுத்தில் முழங்காலினால் அழுத்தியதில் ஏற்பட்ட மூச்சுத்திணறலினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, George Floyd கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய மூன்று பொலிஸ் அதிகாரிகளும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.
இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்ட மூவரையும் 1 மில்லியன் அமெரிக்க டொலர் ரொக்கப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த மூவரும் அவர்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைத்து நீதிமன்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் குறித்த பிணைத்தொகை 7 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலராக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.