மெய்ப்பொருள் காண்பது அறிவு

கரைவலை மீன்பிடியில் இயந்திரத் தொகுதியைப் பயன்படுத்தத் தடை!

- Advertisement -

கரைவலை மீன்பிடி முறையில் இயந்திரத்தொகுதியைப் பயன்படுத்துவதை மறு அறிவித்தல்வரை இடைநிறுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் கரை வலை முறையிலான கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் உளவு இயந்திரத்தில் இயந்திர சுழலியை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையிலே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் குறித்த கூட்டத்தில் உழவு இயந்திரம் மற்றும் இயந்திர சுழலி பயன்படுத்தப்படுவதனால் பாரம்பரிய சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாவும் கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு மீனவர் பிரதிநிதிகளினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேவேளை, கரைவலை செயற்பாட்டிற்கு தேவையான தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களினால் குறித்த பொறிமுறை பயனபாட்டை தெரிவு செய்துள்ளதாக தெரிவித்த கரைவலை தொழிலில் ஈடுபடும் தரப்பினர், அதற்காக தாங்கள் பெருமளவு மூதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுழலி இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்கள் தொடர்பில் நாரா எனப்படும் நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக ஆய்வுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும், மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானம் கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 349 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz