மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க தீர்மானம்

- Advertisement -

கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலா அபிவித்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

- Advertisement -

எனினும், சுற்றுலாவை மேற்கொள்ளும் போது பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு சுற்றுலா அபிவித்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சுற்றுலா நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுற்றுலாப் பயணிகளுக்கு வீசாவை வழங்கும் போது அறவிடப்பட்ட 40 அமெரிக்க டொலர் கட்டணம் 100 டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது;

அத்துடன்,  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதற்கு முன்னர், 72 மணித்தியாலங்களுக்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இலங்கையில் குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் தங்கியிருக்க வேண்டும் எனவும், நாட்டுக்கு வருகை தந்த நான்காவது நாளில் மீண்டும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐந்து நாட்களுக்கு மேலதிகமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு எட்டாவது நாளிலும் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படுகின்ற ஹோட்டல்களில் மாத்திரமே தங்குவதற்கான அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புத்தளத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

புத்தளத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளான நபர் வவுனியாவை வதிவிடமாகக் கொண்டவர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த நபர் கடந்த...

கல்கிஸ்ஸையில் போதப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் இருவர் கைது!

கல்கிஸ்ஸை – கொத்தலாவலபுர பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து ஆயிரம் போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடைய...

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள விசேட கோரிக்கை..!

நாட்டில் வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளதன் காரணமாக, நூற்றுக்கு 70 வீதமான வாகன விற்பனை நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விற்பனையாளர்கள் பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள்...

சைப்ரஸிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா?

சைப்ரஸ் நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட பணியாளர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம்  சைப்ரஸ் நாட்டில் இருந்து 45 பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 644 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 14 விமான சேவைகளின் ஊடாக ஆயிரத்து 122 பேர் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தென்கொரியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ளனர். அத்துடன்,...

Developed by: SEOGlitz