மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடந்த ஆட்சியாளர்களாலும் வடக்கின் அபிவிருத்திகள் தடுக்கப்பட்டன : சி.வி.விக்னேஸ்வரன்!

- Advertisement -

நாட்டில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் மட்டுமல்ல கடந்த நல்லாட்சி அரசாங்கமும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் தடுக்கப்பட்டதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கொரு கேள்வி பதில் எனும் தலைப்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாணசபையானது செயலுருவாக்கப் பாடுபட்ட ஏற்றுமதிக்கான மரக்கறி, பழங்கள் பயிரிடும் வன்னிப் பிரதேச திட்டமானது எல்லா விதமான அறிக்கைகள் பெறப்பட்டும் கொழும்பில் இருக்கும் காணி ஆணையாளர் நாயகத்தினால் மறுக்கப்பட்டது.

நாம் வழங்கிய 200 ஏக்கர் காணியில் வனப் பிரதேசங்களும் அடங்கியிருந்தன என்று பொய் கூறியே இவ்வாறான மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு வெளிநாட்டு ஸ்தானிகரிடம் மூன்று பொருளாதார திட்டங்களை முன்வைத்திருந்தேன்.

எனினும் எமது திட்ட வரைவுகளைத் தமது நாட்டின் தலைநகரத்திற்கு அனுப்பிவிட்டதாகக் கூறி தாமதித்து வந்தார். கடைசியில் அவர் பச்சைக் கொடி காட்டவில்லை. காரணமும் கூறப்படவில்லை.

அவர் நாட்டுத் தலைநகரத்தில் தாமதம் என்று மட்டுமே கூறப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கமே அவற்றை விரும்பவில்லை என்பதை நான் ஸ்தானிகரின் அலுவலர்களிடம் இருந்து அறிந்து கொண்டடேன்” என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz