மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓய்வு பெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளத் தீர்மானம்!

- Advertisement -

சப்ரகமுவ மாகாணத்தில், ஓய்வு பெற்ற தாதியர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

தெரணியாகலை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதற்காக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ அண்மையில் மேற்படி வைத்தியசாலைக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

- Advertisement -

அங்கு அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 218 வைத்தியர்கள் மற்றும் 332 தாதியர்களுக்கான வெற்றிடங்களும் நிலவி வருகின்றன.

சப்ரகமுவ மாகாணத்தில் தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஓய்வு பெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மருத்துவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற வைத்தியர்கள் மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் தற்காலிகமாக சப்ரகமுவ மாகாணத்திற்கு சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அத்தோடு வைத்தியத்துறையில் ஓய்வு பெற்ற இராணுவ வைத்தியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ தாதியர்களையும் சப்ரகமுவ மாகாண வைத்தியசாலைகளுக்கு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளத் தீர்மானம்! 1 ஓய்வு பெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளத் தீர்மானம்! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

அலரி மாளிகையில் கொரோனா தொற்று? – பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த...

 Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

 IPL தொடரின் 44ஆவது போட்டியில்  Chennai Super Kings அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, முதலில்...

Developed by: SEOGlitz