ஐ.பி.எல். 2020 இற்கான போட்டிகளை இலங்கையில் நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
2020 இற்கான ஐ.பி.எல் போட்டிகளை நடத்தத் தயாராகி வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ள நிலையிலேயே சுனில் கவாஸ்கர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தி ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ”கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாக இருப்பதால் குறைந்தது ஒக்டோபர் மாதம்வரை இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டிகளை அடுத்தே நிலைமைகளை மதிப்பிட முடியுமென சுனில் கவாஸ்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார