மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் போட்டிகளில் நிறவெறித் தாக்குதலுக்குள்ளான இலங்கை வீரர்!

- Advertisement -

ஐ.பி.எல் போட்டிகளின்போது தானும் இலங்கையணி வீரர் திசர பெரராவும் நிறவெறித் தாக்குதலிற்கு உள்ளானதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவர் டேரன் சமி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது போது தான் வார்த்தைகளால் நிறவெறித் தாக்குதலிற்கு ஆளானதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

எனினும் அப்போது குறித்த வார்த்தைப் பிரயோகங்களை தனக்குத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க – அமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் பொலிஸாரால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு டேரன் சமி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஐ.சி.சி மற்றும் கிரிக்கெட் சபைகள் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன், நிறவெறிக்கு எதிராக இப்போது குரல் கொடுக்காவிட்டால் எப்போது கொடுக்கப் போகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐபிஎல் போட்டிகளில், தன் மீதும் இலங்கை வீரர் திசர பெரேராவையும் நிறவெறி கொண்ட வார்த்தைகளால் அழைத்ததாக அவர் அதிர்ச்சிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

‘சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும்போது என்னையும் பெரேராவையும் ‘மயடர’ என்று அழைப்பார்கள் அப்படி என்றால் என்ன என்பதை இப்போது புரிந்து கொண்டேன்.

என்னையும் இலங்கை வீரர் பெரேராவையும் அப்படித்தான் அழைப்பார்கள். இதன் அர்த்தம் ஒரு இழி சொல் என்று தெரிந்தவுடன் கோபமடைந்தேன்.
இந்தப் பெயரைச் சொல்லித்தான் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும்போது என்னையும் பெரேராவையும் இந்தியாவில் அழைத்தனர்.

வலுவான கருப்பு மனிதன் என்றுதான் கூறுகிறார்கள் என்று நினைத்தேன், ஆனால் இப்போது அதன் அர்த்தம் எனக்கு கோபமூட்டுகிறது’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

மேல் மாகாணத்தில் நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் குறித்த விபரம்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் மீண்டும்…

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன்,...

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகள் இதோ!

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை...

Developed by: SEOGlitz