மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.க. தலைமையகத்தில் குழப்பநிலை – ரணில் வெளியேற்றம்!

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்திலேயே அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்களுடன் இடம்பெறவிருந்த குறித்த கூட்டத்திலேயே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் மற்றும் கட்சியினது நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியபோது சிலரால் குழப்பநிலை ஏற்பட்டது.

இதனையடுத்து உறுப்பினர்கள் வாக்குவாதப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாகவே அவ்விடத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாண பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீள திறப்பது குறித்த தீர்மானம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இன்று இதற்கான தீர்மானம் மிக்க கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும்,...

கொழும்பில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 130 தொற்றாளர்கள் அடையாளம்!

கொழும்பு மாவட்டத்தில் மேலும் 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நேற்றைய நாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாக பகுதியாக கொழும்பு காணப்படுகின்றது. கொழும்பு மாவட்த்தில், நாரயேன்பிட்டிய பகுதியில் 26 பேரும், மருதானை பகுதியில்...

பங்களாதேஷ் – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத்...

கொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே…!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 669 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பேலியகொடை கொரோனா...

கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் கண்டுபிடிப்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புனானை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற நபரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நபரை ஏலியகொடை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Developed by: SEOGlitz