ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகி ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை மறுதினம் கூடவுள்ளது,
இந்த மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை மறுதினம் முற்பகல் 10 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது,
இதன் போது கட்சியாப்பை மீறி செயற்படும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்,
அத்துடன் அன்றைய தினம் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா இல்லை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,