மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏற்றுமதி துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு : ஜனாதிபதி!

- Advertisement -

ஏற்றுமதித் துறையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தடைகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மிகச் சிறிய அளவிலான ஏற்றுமதித் துறையை பரந்த அளவில் சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு செயற்படுவதே ஏற்றுமதியாளர்களின் முன் உள்ள சவாலாகுமென  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்றுமதி வியாபாரத்துறையில் உள்ள முன்னணி வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் ஒன்று   நேற்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக   பொருளாதார ரீதியில் அனைத்து துறைகளும்   பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், நோய் தொற்றை இல்லாதொழிப்பதுடன் நாட்டை  கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு சில வர்த்தகங்கள் மட்டுமே ஒரு பில்லியனுக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்டிகொடுப்பதாகவும் அவற்றை மேலும் விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கறுவா, கராம்பு, சாதிக்காய் போன்ற விவசாய ஏற்றுமதிகளுக்கு பெறுமதி சேர்த்து அதிக வருமானத்தை ஈட்ட முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலுடன் மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கிடையில் பாரிய சந்தையொன்று உருவாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தலில் விரிவான அறிவுள்ள எமது ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தாம் உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய உத்வேகத்துடன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்தும் பொறுப்பு ஏற்றுமதியாளர்களை சார்ந்ததாகுமென ஜனாதிபதி  இதன்போது குறிப்பிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான விவசாய பயிர்கள் மற்றும் அத்தியாவசியம் அற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் அந்நியச் செலாவணி வீதத்தை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்ததாக  ஜனாதிபதி  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேங்காய், தேங்காய் எண்ணெய், தென்னை உற்பத்திகள், தேயிலை, ஆடைகள், மரக்கறி, பழங்கள், இறப்பர் உற்பத்திகள், தகவல் தொழிநுட்பம், கடலுணவுகள், மிளகு உள்ளிட்ட சிறு பயிர் ஏற்றுமதியுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ரமேஷ் பதிரண, பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ, ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோடன் தேயிலை, இறப்பர், தென்னை, ஆடைகள், மரக்கறி, பழங்கள், வாசனை திரவியங்கள் போன்ற பல்வேறு துறைகளின் முன்னணி ஏற்றுமதி வியாபாரிகள், அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், ஏற்றுமதி வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறுவனத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்கா – கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

அமெரிக்காவில் நேற்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1 இலட்சத்து எண்ணாயிரத்து 63 க்கும் மேற்பட்டோர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் 1 கோடியே 32 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும்...

மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் செங்கலடி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக,...

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

Developed by: SEOGlitz