மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்குச் சட்டம் குறித்த அறிவிப்பு!

- Advertisement -

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட ஊடக அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட குறித்த ஊரடங்கு சட்டம், இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இன்று முதல் நாளை மறுதினம் வரை நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.

அத்துடன், ஜூன் 4ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதி ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும்.

ஜூன் 6ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் – சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி!

பாகிஸ்தான் மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்படி, இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை...

துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்!

கிரேக்க தீவான சமோஸின் வடக்கேயும், துருக்கியின் ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏஜியன் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் 7.0...

தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகும்: த.தே.க கருத்து!

எதிர்வரும் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்று எட்டப்படாவிட்டால் தமிழர்களின் பிரச்சினைகள் நீர்த்துப்போகுமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

கம்பஹாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட சலுகை!

கம்பஹா மாவட்டத்தில், வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, இந்த நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்...

Developed by: SEOGlitz