கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலானது உலகப் பொருளாதாரத்தின் பேரழிவுக்கு அடித்தளமென உலக வங்கியின் தலைவர் David Malpass தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக பில்லியன் கணக்கான பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது இன்னும் ஒரு தசாப்த காலத்திற்கு நீடிக்கும் எனவும் David Malpass சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மே மாதம் முதல் சர்வதேச ரீதியில் 60 மில்லியன் மக்கள் தீவிர வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் தலைவர் David Malpass தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.