மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக தலைவர்கள் பங்கேற்காமல் இடம்பெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டம்!

- Advertisement -

செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் முதல் முறையாக உலகத் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரியவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75-வது ஆண்டு கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அதன் உயர்மட்ட பொது விவாதம், 22ஆம் திகதி இடம்பெறும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் முகமது பாண்டே சர்வதேச ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
உலகத்தலைவர்கள் இந்த கூட்டத்துக்கு தனியாக நியூயோர்க் வர முடியாது.

ஏனென்றால் கொரோனா தொற்று மற்றும் தனிமைப்படுத்தல் விடயங்கள் இருக்கின்றன. எனவே ஒரு நாட்டின் தலைவர் தனியாக வர முடியாது. எனவே இங்கு உலக தலைவர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் தலைவர்கள் நேரில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என முகமது பாண்டே தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், பொதுவிவாதத்தை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை ஐ.நா.உறுப்பு நாடுகளுடன் எங்கள் அலுவலகம் கலந்துரையாடி வருகிறது.
பொது விவாதத்தை பின்னர் மற்றொரு நாளுக்கு தள்ளிப்போடும் உத்தேசமும் இல்லை.

நிச்சயிக்கப்பட்டபடி நடைபெறும். எனினும் கடந்த 74 ஆண்டுகளில் இடம்பெற்ற கூட்டம் போல் இந்த முறை தலைவர்கள் நேரில் வருவதற்கு வாய்ப்பு இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz