மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி ஆரவாரம்!

- Advertisement -

உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து வவுனியா நகரில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் வெடி கொழுத்திக் கொண்டாடியுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்ட வர்த்தமானி என்பவற்றை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று மாலை நிராகரித்தைத் தொடர்ந்தே வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி மகிழ்ந்தார்கள்.

- Advertisement -

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்டமை தொடர்பாக வெளியான வர்த்தமானிக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் 5 நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியது.

இதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர் ஜனாக நந்தகுமார ஆகியோர் வவுனியா பழைய பேரூந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் வெடி கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி ஆரவாரம்! 1 உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி ஆரவாரம்! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz