மெய்ப்பொருள் காண்பது அறிவு

உக்ரைன்  ஜனாதிபதிக்கு அபராதம் விதிப்பு!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள முடக்க செயற்பாட்டு விதிகளை மீறி செயற்பட்டமைக்காக உக்ரைன்  ஜனாதிபதி Volodymyr Zelensky இற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 3ஆம் திகதி முடக்க செயற்பாட்டு விதிகளை  மீறி, மத்திய நகரமான Khmelnytsky இல் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றதற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

உக்ரைன்  ஜனாதிபதி  அலுவலகம்,  Zelensky  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கோப்பி அருந்தும் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் நிழற்படத்தில்  ஜனாதிபதி உள்ளிட்ட  அதிகாரிகள் முகக்கவசம் இன்றி இருந்தனர்.

இந்தநிலையில், முடக்க செயற்பாட்டு விதிகளை மீறி செயற்பட்டமைக்காக ஜனாதிபதி Volodymyr Zelensky இற்கு அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.

எனினும்,  Volodymyr Zelensky இற்கு எவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து எனத் தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz