நாட்டில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 42 பேர் கடற்படையினர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒலுவில் கந்தகாடு மிஹிந்தலை ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட கடற்படையினர் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவை தவிர ஏனைய எட்டு பேர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 749 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.