நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 2 ஆயிரத்து 500 கறவை மாடுகள் அரச பண்ணைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த கறவை மாடுகள் இனப்பெருக்கம் செய்யும் நோக்கத்துடனேயே நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு இலங்கைக்கு மீண்டும் கறவை மாடுகளை கொண்டு வரும் திட்டம் செயற்படுத்தப்படுமானால் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என இலங்கை அரச கால்நடை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.