நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட 40 கொரோனா தொற்றாளர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இன்று இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 471ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 7 கடற்படையினரும், கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.