இரத்மலான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இரத்மலானை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது கடந்த 29 ஆம் திகதி அடையாளம் தெரியாத சிலரினால் நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.