மெய்ப்பொருள் காண்பது அறிவு

இனவாத அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக சங்ககார எச்சரிக்கை!

- Advertisement -

நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் எமக்கும் வலுவானதொரு பாடத்தினைக் கற்றுக் கொடுப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் நிறவெறிக்கு எதரான போராட்டங்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இவ்விடயம் தொடர்பாக அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு மக்களது உணர்வுகளைத் தீர்மானிப்பது ஒருபோதுமே அரசாங்கங்களாக இருக்க முடியாது.

இனவெறி மற்றும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவில் முன்னெடுக்கப்படுவது நம் அனைவருக்கும் ஒரு சக்திவாய்ந்த படிப்பினை ஆகும்.

நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அது அமெரிக்கா, இலங்கை அல்லது வேறொரு நாடாக இருந்தாலும், நமது உணர்வுகளையும் உணர்திறனையும் தீர்மானிக்க வேண்டியது அரசு அல்ல. அது தனிப்பட்ட மக்களுடைய நிலைப்பாடு ஆகும்.

நாங்கள் எங்கள் பிரதிநிதிகளையும் எங்கள் சொந்த மக்களிடமிருந்தே தெரிவு செய்கின்றோம்.

அவர்கள் அரசாங்கத்தில் நடந்துகொள்ளும் முறைகளுக்கும் மக்களாகிய நாங்களே பொறுப்பு.

எங்கள் பலங்களும் பலவீனங்களும் ஒருவருக்கொருவர் நடத்தை மற்றும் எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன.

எங்கள் தெரிவுகள் நாட்டினது அணுகுமுறைகள், செயல்கள், கொள்கை மற்றும் சட்டத்தை வழிநடத்துகின்றன.

எனவே சிறந்த அரசாங்கத்தையும் சிறந்த சமமான ஆட்சியையும் நிறுவ நாம் சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

சாரா என்ற புலஸ்தினி வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி எனும் நபர் தொடர்பாக தகவல் வழங்கிய நபரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த வழக்கு, தேவை ஏற்படின் மீண்டும் அழைக்கப்படும் என கல்முனை நீதிமன்ற...

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள...

அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

ரிஷாட் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் பல்வேறு விடயங்களை மறைத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார், CAPITAL...

Developed by: SEOGlitz