இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான, ஆளுமைவிருத்தி மற்றும் கல்விசார் ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.