இந்தியாவின் சென்னையில் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் எம்.ஜி.ஆர். பலகலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஒக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு மேலும் தீவிரமாக இருக்கலாம் எனவும் குறித்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா முழுவதும் 2 இலட்சத்து 26 ஆயிரத்து 713 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 6 ஆயிரத்து 363 கொரோனா உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.